சுதந்திர தினம்
காசு கொடுக்காமல்
பிறப்பு சான்றிதழ்
கொடுத்தது முனிசிப்பாலிட்டி
ஊழல் ஒழிந்து
எங்க ஊரு எம் எல் ஏ
சனங்களை பார்த்துக்கொண்டிருந்தார்
எலிக்கறி சாப்பிட்ட விவசாயி
மழை வேளையில்
ஐஸ்கிரீம் சாப்பிட்ட
குழந்தையாய் குதூகலிக்கிறார்
தண்ணீர் தராத
அண்டை மாநிலம்
காவிரியை தாமிரபரணியோடு
இனைத்து பால் வார்த்தது
சாதி சங்கங்கள்
வாய்ப்பூட்டு பொறுத்தி
மக்கள் சங்கங்களாக
புன்னகைப் பூத்தன
ரோல்மாடல் நடிகன்
ரொல்ட்கோல்டாய் தேய
கலாம் கனவு
நனவாய் மாறுகிறது
தியேட்டர் வாசல்
ரசிகன்
ரானுவ வீரரிடம்
ஆட்டோகிராப் வாங்க கியூவில்
குண்டு குழி பாதை
எங்கள் வீட்டு
சமையல் மேசையாய்
பளப்பளக்கிறது
வேலைப் வாய்ப்பு
அலுவல்
அலுவல் இல்லாமல்
அழுது கொண்டிருக்கிறது
அமெரிக்கா சென்ற
நண்பன்
மன்வெட்டி பிடித்து
வாய்க்கால் வெட்டிக்கொண்டிருக்கிறான்
சட்டென்று
பள்ளிக்கூட மணியோசை
மிட்டாய் வாங்க ஓடும்
தம்பி
கனவு கலைந்தவனாய்
60 ஆம் சுதந்திர தினத்தை
கொண்டாட ஆயத்தமானேன்