கடலைங்க
எனக்கு கடலைன்னா என்னன்னு தெரிஞ்சதே நம்ம UG ல தான். அப்ப தான் coed முதல் தடவையா பார்க்கிறேன். பொண்ணுங்கள பார்க்கும் போது ஒரு குறுகுறுப்பா தான் இருக்கும். எனக்கு அது இருந்தது ஆச்சர்ய படுற விஷயம் இல்ல. ஏன்னா நாங்கெல்லாம் யூத்-ல. அவங்கள ஒரக்கண்ணுல பார்த்துட்டு ஒரு அல்ப சந்தோசத்த அடைஞ்சிக்குவோம். ஒரு சிலர் இருக்கானுங்க அவன் அவளைப் பார்க்க அவள் மண் பார்த்தாள், அவள் அவணைப் பார்க்க அவன் எங்கோ பார்க்க.....இப்படி காதல் காவியமே நடக்கும்.
ஆனா என்னென்மோ பொண்ணுங்க கிட்ட பேச ஆரம்பிச்சா இல்லாத வெட்கம், அசடு வழியறது எல்லாம் தெரியும். வாத்தியார பார்த்து நக்கலா பேசுரவன் எல்லாம், பொண்ணுனங்ககிட்ட முதல்ல பேசும் போது தடுமாறுவாங்க பாருங்க ஐய்யோ ஐய்யோ சூப்பரா இருக்கும். இதுல பேசி முடிச்ச உடனே மூஞ்சியில ஒரு பல்ப் எரியும் பாருங்க இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்த்து வச்ச சந்தோசம் முகத்தில தெரியும்.
ஆனா அதுக்கப்புறம் அவன் போடுற கடலைல நம்ம தான் ஒதுங்கி போக வேண்டியது இருக்கும். பிறகு புகை மூட்டமா இருந்தா பக்கத்திலயா நிக்க முடியும்.
சரி. கடலை போடுவது எப்படி?
1.பொண்ணுங்களுக்கு நம்ம மேல ஒரு நம்பிக்கை வரனும். அதனால கண்ணை பார்த்து பேச பழகனும். நம்ம கண்கள் அவர்களுக்கு தேவையில்லாத சந்தேகத்த ஏற்படுத்த கூடாது.
2.நம்மல நாமே பெரிய புத்திசாலின்னு காண்பிச்சுக்க கூடாது, ஏன்னா அவங்களுக்கு தானா தெரியனும்.
3.படிக்கும் போது படிக்கனும், ஆட்டம் போடும் போது ஆட்டம் போடனும்.
4.கெட்ட வார்த்தைகள கட்டாயம் தவிர்க்கவும்.(முட்டாள், அறிவு கெட்டவன் இது தான் நீங்க தெரிஞ்ச கெட்ட வார்த்தையா காட்டனும்.)
5.அவங்க சொல்றத கண்டிப்பா கேக்கனும்...இல்லைனாலும் பராவால கேக்கிறா மாதிரி நடிக்கயாவது தெரிஞ்சி இருக்கனும். (உதாரணமா.. சிகரெட் ட விட சொன்னா விடுறேன் சொல்லிடனும். முடிஞ்ச அளவுக்கு விட ட்ரை பன்னனும், இல்லியா அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கனும்.)
6.Emotional ஆ காட்டிக்கனும் (தப்பு செஞ்சா sorry சொல்லியே இம்சைய கூட்டனும்).
7.records எல்லாம் முடிச்சிடனும்(நல்ல பையனா காண்பிக்கனும்ல).
இதெல்லாம் கடைசி வரைக்கும் பாலோ பண்ண வேண்டிய அவசியம் இல்ல...நம்ம கடலை strong ஆன உடனே நம்ம மாத்திக்கலாம்.
நீங்க கேக்கிறது புரியுது, நீ இதெல்லாம் பாலோ பண்ணி தான் கடலை போட்டியான்னு?....NO. இதெல்லாம் கடலை தர்மம்..புரியல (Kadalai Ethics)...
இப்படி ஆரம்பிச்ச கடலை எப்படி போகுதுன்னு பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்.