Saturday, September 1, 2007

மோரு சாப்பிடலயோ மோரு....

நான் என் நண்பர்கள் சிலரும் சென்னையில் ப்ரொஜெக்ட் வொர்க் செய்து கொண்டிருந்தோம். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் அலுவகத்திற்கு காலை 8.45மணிக்கு சரியாக அடையார் டிப்போவில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்கு கரெக்டாக வந்து விடுவோம். 9 மணிக்கு Attendance கொடுத்து விட்டு, ப்ரொஜெக்ட் வொர்க் ஆரம்பிச்சா 12.30 மணிக்கு சரியா வயிறு பெல் அடிச்சு மதிய சாப்பாட ஞாபகப்படுத்தும். நடுவுல என்ன தான் காபியோ டீயோ உள்ளப் போனாலும் வயிறு சரியா அதன் வேலையை செய்யும்.

நாங்க சேர்ந்து தான் போவோம். கனபதி பவன் தான் எங்க ஆபீஸ் பக்கத்திலுள்ள ஓட்டல். மதியம் சாப்பாடு கிடையாது, வெரைட்டி ரைஸ், டிபன் தான் கிடைக்கும். daily சாம்பார் சாதம், தயிர் சாதம் தான் எங்க மெனு. சர்வர் எங்கல பார்த்தாலே ரெண்டு ப்ளேட் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கொண்டு வந்திடுவான். கல்லா ல கரெக்டா 40ரூ பில் செட்டில் பன்னிடுவோம். என்ன இன்னைக்கும் 40ரூபா தான் பில்லா என்று சிரித்துக் கொண்டே பணத்தை கல்லாவில் போட்டுக் கொள்வார்.

நாங்க tuck in shirt and shoe போட்ட வேலையில்லா பட்டதாரினு தெரியாது. நாங்கெலும் சிரிச்சுக்கிட்டே வெளியே வந்து விடுவோம்.

இப்படி போயிட்டுயிருடந்த எங்க காலம், ஒரு நாள் மட்டும் பில்ல ஏத்தினா என்னனு தோனிச்சு. சரினு உக்காந்து நாலு பேரும் 8 கண்களால 4 இஞ்ச் மெனு கார்ட அளந்து ஒரு item அ செலக்ட் பண்ணினோம். பட்டர் மில்க், எங்களுக்கு அது பரிச்சய மில்லாத அயிட்டமா இருந்தது. மச்சான் பருத்தி பாலா இருக்குமோ பேசிக்கிட்டோம். ஒரு வேள பாதாம் மில்க் போல அயிட்டம் ஆ இருக்கும் னு ஆசை வேறு.

எக்ஸாம் ஹால் ல கேள்வித்தாளுக்கு காத்து இருக்கும் மாணவன் போல, எல்லாரும் பட்டர் மில்க்கிற்கு காத்து இருந்தோம். ஒரு வழியா சர்வர் கொண்டு வந்து வைச்சான், ஸ்ட்ரா லாம் போட்டு கண்ணாடி க்ளாஸுல இருந்தது பட்டர் மில்க். ஆகா புதுசா சாப்பிட போறோம்ங்கிற ஆர்வத்தில வச்ச உடனே ஒரு சிப் இழுத்துட்டு, முகத்த தூக்கினா, எல்லார் முகத்திலயும் ஒரு அசட்டுத்தனம். அடப்பாவமே இத தான் இவ்வளவு நேரம் பெரிசா நினைச்சோமான்னு.

கல்லாவுல 64ரூபா கொடுக்கும் போது இத பொய் ஆறு ரூபா கொடுத்தா குடிச்சோம்னு ஆச்சு.

வெளியில வந்தா டீக்கடை வாசல்ல மோரு 1 ரூபா வித்துக்கிட்டு இருக்கான்.

அன்னையிலிருந்து எங்க போனாலும் மெனு கார்ட் ல பட்டர் மில்க்னு படிச்சா என்னையும் அறியாம லேசா சிரிச்சுக்குவேன்.

எங்களைப் போன்ற ஆளுங்களுக்கு பட்டர் மில்க் னா மோரு ன்னு அர்த்தம் இருக்குதுடோய்......

என்னுடன் இந்த அனுபவத்தில் பங்கேற்றவர்கள், பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜன், ராம் மோகன்.

No comments: